Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
10 நிமிடத்தில் சுவையான பொரியல் செய்யணுமா? அப்ப இந்த குடைமிளகாய் பொரியல் செய்யுங்க..
Capsicum Poriyal In Tamil: பொரியல் இல்லாமல் உங்கள் வீட்டில் மதிய சாப்பாடு யாருக்கும் இறங்காதா? தினமும் உங்க வீட்டில் பொரியல் செய்வீங்களா? இன்னைக்கு என்ன பொரியல செய்வதென்று தெரியவில்லையா?
உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாயைக் கொண்டு அசத்தலான சுவையில் ஒரு பொரியலை செய்யுங்கள். இந்த குடைமிளகாய் பொரியல் சாம்பார், புளிக்குழம்பு என்று அனைத்திற்கு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குடைமிளகாயை தினமும் உணவில் சேர்ப்பதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். ஏனெனில் அதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
உங்களுக்கு குடைமிளகாய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* குடைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
* பெருங்காய தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் -1/4 கப்
செய்முறை:
* முதலில் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி,
நீரை சூடேற்ற வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், மஞ்சள் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கையால் கிளறி விட வேண்டும்.
* பின்பு இட்லி தட்டை எடுத்து, அதில் இந்த குடைமிளகாயை பரப்பி, இட்லி
பாத்திரத்தில் வைத்து, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 6-7 நிமிடம்
குடைமிளகாயை வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூளை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் கிளறி,
துருவிய தேங்காயை சேர்த்து, சுவைக்கு வேண்டுமானால் சிறிது உப்பு தூவி
மீண்டும் 2-3 நிமிடம் கிளறிவிட்டு இறக்கினால், சுவையான குடைமிளகாய்
பொரியல் தயார்.
Image Courtesy: traditionallymodernfood



Click it and Unblock the Notifications
