Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
Capsicum chicken gravy recipe : குடைமிளகாய் சிக்கன் கிரேவி
இதுவரை நீங்கள் எத்தனையோ ஸ்டைலில் சிக்கன் கிரேவி செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வைட்டமின் சி அதிகம் நிறைந்த குடைமிளகாயை கொண்டு சிக்கன் கிரேவி செய்ததுண்டா? இல்லையென்றால், இனி முயற்சித்துப் பாருங்கள்.
இதுவரை நீங்கள் எத்தனையோ ஸ்டைலில் சிக்கன் கிரேவி செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வைட்டமின் சி அதிகம் நிறைந்த குடைமிளகாயை கொண்டு சிக்கன் கிரேவி செய்ததுண்டா? இல்லையென்றால், இனி முயற்சித்துப் பாருங்கள். இந்த குடைமிளகாய் சிக்கன் கிரேவி சப்பாத்தி, பூரி, நாண், சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதோடு இதன் சுவை சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.

உங்களுக்கு குடைமிளகாய் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கனை வேக வைப்பதற்கு...
* சிக்கன் - 1 கிலோ
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* பச்சை குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் சிக்கனுடன், அதை வேக வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்து கிளறி, குக்கரை மூடி குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* குக்கர் விசில் போனதும், குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, தக்காளியை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மசாலா பொடிகள், தக்காளி கெட்சப், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5-8 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள சிக்கனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி, வேண்டுமானால் சிறிது நீரையும் ஊற்றி கிளறி, 15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், குடைமிளகாய் சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications