Latest Updates
-
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள்
தக்காளி, வெங்காயம் சேர்க்காம குழம்பு செய்யணுமா? அப்ப முட்டைக்கோஸ் குழம்பை செய்யுங்க..
Cabbage Kuzhambu Recipe In Tamil: தற்போது ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் தக்காளியை வாங்குவது என்பது சற்று கடினமாக இருக்கும். இந்நிலையில் தக்காளி சேர்க்காமல் சமையலை எப்படி செய்வதென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
உங்களுக்காக தமிழ் போல்ட்ஸ்கை தக்காளி மட்டுமின்றி, வெங்காயமும் சேர்க்காமல் ஒரு அருமையான குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. இது முட்டைக்கோஸ் குழம்பு. இப்படி குழம்பு செய்தால், முட்டைக்கோஸின் சுவையே தெரியாது. மேலும் இந்த குழம்பை 2 நாட்கள் வைத்தும் சாப்பிடலாம்.

உங்களுக்கு வெங்காயம், தக்காளி சேர்க்காமல் முட்டைக்கோஸ் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம், தக்காளி சேர்க்காமல் செய்யக்கூடிய முட்டைக்கோஸ் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைத்து அரைப்பதற்கு...
* முட்டைக்கோஸ் - 1/4 கிலோ (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 5 (துண்டுகளாக்கப்பட்டது)
* பூண்டு - 10 பல்
* புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு
* தண்ணீர் - 1 டம்ளர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
குழம்பிற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரை எடுத்து, அதில் முட்டைக்கோஸ், கத்திரிக்காய்,
பூண்டு, புளி, 1 டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு
சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, காய்கறியை நன்கு குளிர வைத்து
மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து,
கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள்
சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள முட்டைக்கோஸை சேர்த்து, குழம்பிற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூள்
சேர்த்து கிளறி, உயர் தீயில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக்
குறைத்து, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அப்படி
கொதிக்க வைக்கும் போது, இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விட
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து கிளறி, குறைவான தீயில் வைத்து
மீண்டும் 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ்
குழம்பு தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications