Latest Updates
-
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா?
சுவையான... பட்டர்ஸ்காட்ச் புட்டிங்
உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான ஸ்வீட் செய்து கொடுக்க நினைத்தால், பட்டர்ஸ்காட்ச் புட்டிங் செய்து கொடுங்கள். இது மாலை வேளையில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான ஸ்வீட்.
உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான ஸ்வீட் செய்து கொடுக்க நினைத்தால், பட்டர்ஸ்காட்ச் புட்டிங் செய்து கொடுங்கள். இது மாலை வேளையில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான ஸ்வீட். அதோடு குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். நிச்சயம் உங்களுக்கு பட்டர்ஸ்காட்ச் புட்டிங் எப்படி செய்வதென்று தெரிந்திருக்காது.

ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை பட்டர்ஸ்காட்ச் புட்டிங் ரெசிபியை எப்படி எளிதில் வீட்டிலேயே செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பால் - 1 1/2 கப்
* கடல் பாசி - 5 கிராம்
* தண்ணீர் - 1/2 கப்
* நாட்டுச் சர்க்கரை - 1/2 கப்
* பட்டர்ஸ்காட்ச் சிப்ஸ் - 1/4 கப்
* பட்டர்ஸ்காட்ச் எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதை வடிகட்டிவிட்டு, அந்த பாலை 3-5 நிமிடம் கொதிக்க விட்டு, ஓரளவு கெட்டியாகும் போது இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதில் பட்டர்ஸ்காட்ச் எசன்ஸ் ஊற்றி நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது கடல் பாசியை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து கடல் பாசியைக் கரைக்க வேண்டும்.
* கடல் பாசி முழுவதும் உருகியதும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின் பிளெண்டரில் பட்டர்ஸ்காட்ச் சிப்ஸ் போட்டு அரைத்து, அதை கொதிக்க வைத்துள்ள பாலுடன் சேர்த்து, அத்துடன் கடல் பாசியையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இப்போது ஒரு ட்ரேயை எடுத்து, அதில் தயாரித்து வைத்துள்ள புட்டிங் கலவையை ஊற்றி நன்கு பரப்பி, ஒரு அலுமினியத் தாள் கொண்டு மூடி, ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் திறந்தால் சுவையான பட்டர்ஸ்காட்ச் புட்டிங் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications