Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
சிக்கனை வெச்சு ஒரே மாதிரி வறுவல் செய்யாம.. ஒருடைம் இப்படி வித்தியாசமா செஞ்சு சாப்பிடுங்க..
Butter Garlic Chicken Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? சிக்கனை வாங்கினாலே எப்போதும் வறுவல் செய்வீர்களா? எப்பவும் ஒரே மாதிரி சிக்கனை வறுவல் செய்து சாப்பிட்டு போரடித்து விட்டதா?
சற்று வித்தியாசமாக, ஹோட்டலில் வாங்கி சாப்பிடுமாறான ஒரு சிக்கன் சைடு டிஷ் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பட்டர் கார்லிக் சிக்கனை செய்யுங்கள். இந்த சிக்கன் செய்வது மிகவும் ஈஸி. முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பட்டர் கார்லிக் சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டர் கார்லிக் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/4 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 20 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 2 டீஸ்பூன் (நீரில் கரைத்துக் கொள்ளவும்)
* வெங்காயத் தாள் - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் எலும்பில்லாத சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் உப்பு,
மிளகுத் தூள், சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி எலுமிச்சை சாறு
சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 3/4 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 3/4 மணிநேரம் கழுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன்
துண்டுகளை சேர்த்து நன்கு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து,
பாதி உருகியதும், அதில் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பச்சை
மிளகாயை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சோயா சாஸை சேர்த்து கிளறி விட வேண்டும். அதன் பின்
வெங்காயத் தாளை சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* பிறகு சோள மாவை நீரை கரைத்து, அதை வாணலியில் உள்ள பூண்டு,
மிளகாயுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். லேசாக கெட்டியாகத் தொடங்கும்
போது, அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, நன்கு 8 நிமிடம்
குறைவான தீயில் வைத்து கிளறி இறக்கினால், சுவையான பட்டர் கார்லிக்
சிக்கன் தயார்.



Click it and Unblock the Notifications