Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
பட்டர் பீன்ஸ் வாங்குனா.. இந்த மாதிரி குழம்பு வையுங்க.. மட்டன் குழம்பு மாதிரி செமயா இருக்கும்..
Butter Beans Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் இருப்பவர்கள் தினமும் மட்டன் குழம்பு சுவையில் சாதத்திற்கு குழம்பு கேட்கிறார்களா? அதற்காக தினமும் மட்டன் எடுத்து சமைக்க முடியாது அல்லவா? இந்நிலையில் வீட்டில் பட்டர் பீன்ஸ் இருந்தால், அதைக் கொண்டு மசாலா அரைத்து குழம்பு செய்யுங்கள்.
இப்படி குழம்பு செய்யும் போது, அந்த குழம்பு மட்டன் குழம்பு போன்று சுவையாக இருக்கும். அதோடு, இந்த குழம்பு சாதம், இட்லி, தோசை என அனைத்து விதமான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த பக்குவத்தில் குழம்பு செய்தால், பின் அடிக்கடி பட்டர் பீன்ஸை தேடி அலைந்து, வாங்கி வந்து சமைப்பீர்கள். அந்த அளவில் குழம்பு ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பட்டர் பீன்ஸ் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டர் பீன்ஸ் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பட்டர் பீன்ஸ் - 250 கிராம்
* தண்ணீர் - 2 டம்ளர்
* உப்பு - சிறிது
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* பட்டை - 1
* ஏலக்காய் - 1
* கல்பாசி - சிறிது
* மல்லி - 3/4 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ- 1 இதழ்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* முந்திரி - 6
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* கசகசா - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1/4 மூடி
* தக்காளி - 1
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - சிறிது
* உளுத்தம் பருப்பு - சிறிது
* மிளகு - 10
* சீரகம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 3/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள்/மட்டன் மசாலா - 2 ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பட்டர் பீன்ஸை குக்கரில் போட்டு, அதில் 2 கப் நீரை
ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, ஏலக்காய், கல்பாசி, மல்லி, கிராம்பு, சோம்பு,
அன்னாசிப்பூ, கறிவேப்பிலை, முந்திரி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் கசகசாவை சேர்த்து வதக்கி, பின் நறுக்கிய தக்காளியை
சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை சேர்த்து ஒருமுறை அரைத்து,
பின் அதில் வதக்கி குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம்,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி
ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள்
தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள பட்டர் பீன்ஸை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள்
சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள
மசாலாவை சேர்த்து கிளறி, பச்சை வாசனை போய் எண்ணெய் பிரியும் வரை
கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பட்டர்
பீன்ஸ் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications