Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கப் ரவையும், 1/2 கப் தயிரும் இருந்தா... காலையில் இந்த பன் தோசையை செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
Bun Dosa Recipe In Tamil: காலை டிபன் செய்ய இட்லி, தோசை மாவு இல்லையா? அப்போது பூரி, பொங்கல் என்று செய்வதற்கு பதிலாக, ஒருமுறை வீட்டில் ரவையும், தயிரும் இருந்தால், பன் தோசையை ட்ரை செய்யுங்கள். இந்த தோசை செய்வதற்கு மிகவும் சுலபம். இது பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.
இந்த தோசைக்கு தேங்காய் சட்னி ஒன்றே போதும். செம சூப்பராக இருக்கும். முக்கியமாக இப்படி தோசை செய்யும் போது, வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். வேலைக்கு செல்பவர்கள் காலையில் தாமதமாக எழுந்துவிட்டால், டக்கென்று ஒரு காலை டிபன் செய்ய நினைத்தால், இதை செய்யலாம்.

உங்களுக்கு பன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை -1 கப்
* தயிர் - 1/2 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் ரவை, 1/2 கப் தயிர், 1 டீஸ்பூன்
உப்பு மற்றும் 1 டீஸ்பூன் அரிசி மாவை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்கி இறக்கி, ரவையுடன் சேர்த்து அத்துடன்
கொத்தமல்லியைத் தூவி நன்கு கலந்து விட வேண்டும்.
* மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், ஒவ்வொரு
கரண்டியாக கல்லில் ஊற்றி, மேலே எண்ணெய் சேர்த்து, மூடி வைத்து சிறிது
நேரம் வேக வைத்து, பின் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால்,
சுவையான பஞ்சு போன்ற பன் தோசை தயார்.



Click it and Unblock the Notifications