Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
ப்ராக்கோலியை எப்படி சமைப்பது-ன்னு தெரியலையா? இப்படி குருமா செய்யுங்க.. சூப்பரா இருக்கும்...
Broccoli Kurma Recipe In Tamil: நீங்கள் மார்கெட்டுகளில் காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பார்த்திருப்பீர்கள். அதைப் பார்த்ததும், பலருக்கும் எப்படி இதை சமைப்பது என்று ஒரு கேள்வி எழும். நீங்கள் இந்த ப்ராக்கோலியை வாங்கி சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் ப்ராக்கோலியைக் கொண்டு குருமா செய்யுங்கள்.
இந்த ப்ராக்கோலி குருமா சப்பாத்தி, சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். ப்ராக்கோலி சுவையானது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய காய்கறியும் கூட. அடிக்கடி இதை சமைத்து சாப்பிட்டால், உடலில் போதுமான அளவில் வைட்டமின் சி இருக்கும்.

உங்களுக்கு ப்ராக்கோலி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ப்ராக்கோலி - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - சிறிது
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் ப்ராக்கோலியை உப்பு மஞ்சள் தூள் சேர்த்த சுடுநீரில்
போட்டு சிறிது நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், ப்ராக்கோலியை சேர்த்து சில நிமிடங்கள்
வதக்கி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, வரமிளகாய் சேர்த்து நல்ல
மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுத்து
இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள, கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நிறம் மாற வதக்கியதும், தக்காளியை
சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் ப்ராக்கோலியை சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான ப்ராக்கோலி குருமா தயார்.
Image Courtesy: cookpad



Click it and Unblock the Notifications
