Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
Broccoli Fried Rice : ப்ராக்கோலி ஃப்ரைடு ரைஸ்
உங்கள் வீட்டில் உள்ளோர் ஃப்ரைடு ரைஸை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் முட்டை மற்றும் ப்ராக்கோலி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான ப்ராக்கோலி ஃப்ரைடு ரைஸ் செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் என்ன ஸ்பெஷலாக செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் ஃப்ரைடு ரைஸை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் முட்டை மற்றும் ப்ராக்கோலி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான ப்ராக்கோலி ஃப்ரைடு ரைஸ் செய்யுங்கள். இந்த ஃப்ரைடு ரைஸ் பெரியோர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு ப்ராக்கோலி ஃப்ரைடு ரைஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி ஃப்ரைடு ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1 கப் (வேக வைத்தது)
* ப்ராக்கோலி - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* முட்டை - 2 (ஒரு பௌலில் உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும்)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் துண்டு (துருவியது)
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உடைத்து அடித்து வைத்துள்ள முட்டைகளை ஊற்றி கிளறி, முட்டை புர்ஜி போல் செய்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, ப்ராக்கோலியை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள பாசுமதி சாதத்தை சேர்த்து கிளறி, முட்டை புர்ஜியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் வினிகர், சோயா சாஸ் சேர்த்து கிளறி, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், ப்ராக்கோலி ஃப்ரைடு ரைஸ் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
