Latest Updates
-
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
ருசியான... ப்ராக்கோலி சப்ஜி
ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன மற்றும் இதை சமைத்து சாப்பிட்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். அதுவும் ப்ராக்கோலியை சப்ஜி செய்தால், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
காலிஃப்ளவர் போன்று காட்சியளிக்கும் ப்ராக்கோலியை அனைவருமே கடைகளில் பார்த்திருப்போம். பலருக்கு இந்த ப்ராக்கோலியை எப்படி செய்வதென்று தெரியாது. இதனால் அதை வாங்காமல் பலரும் இருப்பார்கள். ஆனால் ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன மற்றும் இதை சமைத்து சாப்பிட்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். அதுவும் ப்ராக்கோலியை சப்ஜி செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

ப்ராக்கோலியை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது புற்றுநோயை எதிர்க்க உதவும், இளமையைத் தக்க வைக்கும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும், வயிற்று கோளாறுகளை சரிசெய்யும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்துக் கொள்ளும், தலைமுடிக்கு நல்லது, கொலஸ்ட்ராலைக் குறைக்கும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். எனவே இவ்வளவு நன்மைகளைக் கொண்ட ப்ராக்கோலியை இனிமேலும் வாங்காமல் இருக்காதீர்கள்.
உங்களுக்கு ப்ராக்கோலி சப்ஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி சப்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
* ப்ராக்கோலி - 1 பெரிய கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 1/4 கப்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் ப்ராக்கோலியைப் போட்டு, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும். பின் மூடி வைத்து ப்ராக்கோலி நன்கு வேக வைக்க வேண்டும்.
* ப்ராக்கோலி வெந்ததும், தீயைக் குறைக்க வேண்டும் பின்பு அதில் கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* சப்ஜியில் இருந்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி வேக வைத்து இறக்கினால், சுவையான ப்ராக்கோலி சப்ஜி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
