மீந்து போன சப்பாத்தியுடன், 2 முட்டையும், 2 கத்திரிக்காயும் இருந்தா போதும்.. புதுமையான டிபன் செஞ்சுடலாம்...

Posted By:

Brinjal Egg Roll Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரி இட்லி, தோசை, சப்பாத்தி என்று சாப்பிட்டு போடித்துவிட்டதா? சற்று புதுமையான காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இரவு சுட்ட சப்பாத்தி உள்ளதா?

அத்துடன் முட்டையும், கத்திரிக்காயும் இருந்தால், புதுமையான சுவையில் ஒரு கத்திரிக்காய் முட்டை ரோல் செய்யலாம். இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.

Brinjal Egg Roll How To Make a Brinjal Egg Roll Recipe

உங்களுக்கு கத்திரிக்காய் முட்டை ரோல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் முட்டை ரோல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கத்திரிக்காய் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* முட்டை - 2
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
* மீந்து போன சப்பாத்தி

செய்முறை:

* முதலில் கத்திரிக்காயை நீரில் கழுவிவிட்டு, அதை மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு அலசி, நீரை வடிகட்டிவிட வேண்டும்.
* பின் அந்த கத்திரிக்காயுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்த பிரட்டி, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அத்துடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லியைத் தூவி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பரப்பிவிட்டு, பின் அதில் கத்திரிக்காய் துண்டுகளை போட்டு, முன்னும், பின்னும் 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதன் மேல் பாதி முட்டை கலவையை ஊற்றி, 30 நொடிகள் வேக வைத்து, பின் அதன் மேல் மீந்து போன சப்பாத்தி இருந்தால், அதை வைத்து அழுத்தி, 30 நொடிகள் வேக வைத்து எடுத்தால், சுவையான கத்திரிக்காய் முட்டை ரோல் தயார்.

Image Courtesy: Akshaya. com

[ of 5 - Users]
Story first published: Saturday, September 21, 2024, 6:30 [IST]
Desktop Bottom Promotion