Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
5 நிமிடத்தில் ருசியான பிரட் உப்புமா செய்வது எப்படி?
தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு போரடித்துவிட்டது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு பிரட் உப்புமா செய்து கொடுங்கள்.
இன்று காலை என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு போரடித்துவிட்டது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு பிரட் உப்புமா செய்து கொடுங்கள். இந்த பிரட் உப்புமாவிற்கு எந்த வகையான பிரட்டையும் பயன்படுத்தலாம். மேலும் இது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது. அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பும் போது, காலை உணவாக இந்த ரெசிபியை செய்யலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ஒரு சிம்பிளான ரெசிபி என்றே கூறலாம். இதை காலை வேளையில் மட்டுமின்றி, மாலை வேளையில் பசிக்கும் போது செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு பிரட் உப்புமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 4 துண்டுகள்
* பெரிய வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10 (உடைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* இஞ்சி - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாகும் வரை ஃப்ரை செய்ய வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் பிரட் துண்டுகளை சேர்த்து, அதோடு எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி, சிறிது நீரைத் தெளித்து நன்கு 5 நிமிடம் கிளறி விட்டு இறக்கினால், சுவையான பிரட் உப்புமா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
