Latest Updates
-
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா?
காலையில் எப்பவும் இட்லி, தோசை செய்யாம... ஒருடைம் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க..
Bread Onion Stuffed Masala Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? ஆனால் எப்போதும் இப்படி ஒரே இட்லி, தோசையை செய்தால் அழுத்துவிடும். எனவே அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சிக்க வேண்டும். அதுவும் விடுமுறை நாட்களில் தான் இப்படி வித்தியாசமான ரெசிபிக்களை செய்ய முடியும்.
இன்று காலை வித்தியாசமான டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அருமையான பிரட் ஆனியன் ஸ்டப்டு மசாலாவை செய்யுங்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு பிரட் ஆனியன் ஸ்டப்டு மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் ஆனியன் ஸ்டப்டு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 10 துண்டுகள்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உள்ளே வைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெலிதாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
கோட்டிங்கிற்கு...
* முட்டை - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை
மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து
குறைவான தீயில் வைத்து, பச்சை வாசனை போக 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் தக்காளி சாஸை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கி, தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் மஞ்சள் தூள்,
மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் கொத்தமல்லியை சிறிது
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பிரட் துண்டுகளை எடுத்து, அதை வட்ட வடிவிலோ அல்லது
விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் நடுவே வெங்காய கலவையை வைத்து
பரப்ப வேண்டும். பின் அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை வைத்து கைகளால்
நன்கு அழுத்தி விட வேண்டும். இதேப் போன்று மற்ற பிரட் துண்டுகளையும்
செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு தட்டையான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3-4 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஸ்டப் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளை
ஒவ்வொன்றாக எடுத்து, முட்டை கலவையில் பிரட்டி, எண்ணெய் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பிரட் ஆனியன் ஸ்டப்டு மசாலா
தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications