Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
மழை நேரத்தில் பிரட் இருந்தால் ஈவ்னிங் இப்படி வடை சுட்டு சாப்பிடுங்க.. மொறுமொறுன்னு அருமையா இருக்கும்...
Bread Methu Vadai Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுவும் மாலை வேளையில் தான் மழை அதிகம் பெய்கிறது. அப்படிப்பட்ட மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சூடாகவும், மொறுமொறுவென்றும் ஏதாவது செய்து சாப்பிட நினைக்கிறீர்களா?
அதுவும் மழை நேரத்தில் வடை தான் சாப்பிட நன்றாக இருக்கும். ஆனால் வழக்கமாக செய்யும் வடையை விட சற்று வித்தியாசமான வடை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு வடை செய்து சாப்பிடுங்கள். இந்த பிரட் மெதுவடை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பிரட் மெதுவடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் மெதுவடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 8 துண்டு
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* ரவை - 50 கிராம்
* அரிசி மாவு - 125 கிராம்
* கொத்தமல்லி - சிறிது
* சமையல் சோடா - 1 சிட்டிகை
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை வெட்டி ஒரு
பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கைகளால் நன்கு
பிசைந்து விட வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, ரவை, அரிசி மாவு சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய்,
வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சமையல் சோடாவை சேர்த்து, மீண்டும் 1 டேபிள் ஸ்பூன்
தயிர் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் எடுத்து,
மெதுவடை போன்று தட்டி நடுவே ஓட்டை போட்டு, எண்ணெயில் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும்
எண்ணெயில் வடையாக தட்டிப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான பிரட்
மெதுவடை தயார்.



Click it and Unblock the Notifications