Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய... பிரட் மஞ்சூரியனை செய்வது எப்படி?
Bread Manchurian Recipe: விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது தான் நம்மால் பலவிதமாக சமைத்து சாப்பிட முடியும். அதுவும் மாலை நேரங்களில் நிச்சயம் பலருக்கும் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து சாப்பிட வேண்டுமென்று தோன்றும்.
குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் நிச்சயம் சாப்பிட ஏதாவது கேட்பார்கள். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அந்த பிரட் கொண்டு மஞ்சூரியன் செய்து கொடுங்கள்.

இந்த பிரட் மஞ்சூரியன் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாக இருக்கும். உங்களுக்கு பிரட் மஞ்சூரியனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே பிரட் மஞ்சூரியன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 5 துண்டுகள்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மாவிற்கு...
* மைதா - 1/4 கப்
* சோள மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
சாஸ் செய்வதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெஙகாயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* க்ரீன் சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கையளவு
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் மைதா, சோள மாவு, உப்பு, மிளகுத் தூள் மற்றும்
சிறிது நீரை ஊற்றி சற்று நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பிரட் துண்டுகளைப் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரட் துண்டுகளைப் போட்டு முன்னும் பின்னும்
மொறுமொறுப்பாகும் வரை ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து
ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சில்லி சாஸ், சோயா சாஸ், தக்காளி கெட்சப், சர்க்கரை,
உப்பு, வினிகரை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின்னர் அதில் மிளகுத் தூள் மற்றும் சிறிது நீரை ஊற்றி கிளறி விட
வேண்டும்.
* அடுத்து சோள மாவை நீரில் கலந்து சேர்த்து கிளறி, குறைவான தீயில்
வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு ஒருசேர கிளறி, மேலே ஸ்ப்ரிங்
ஆனியனை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கினால், சுவையான பிரட் மஞ்சூரியன்
தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications









