Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
ஈஸியான முறையில் பிரட் குலாப் ஜாமூன் செய்வது எப்படி?
வீட்டில் உள்ள பிரட் கொண்டே அட்டகாசமான சுவையைக் கொண்ட பிரட் குலாப் ஜாமூன் செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், உங்கள் வீட்டில் பிரட் இருந்தால், பிரட் குலாப் ஜாமூனை முயற்சி செய்து பாருங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் இனிப்புக்களை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? குறிப்பாக குலாப் ஜாமூன் என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி உங்கள் வீட்டில் குலாப் ஜாமூன் செய்யும் வழக்கம் உள்ளதா? இதுவரை நீங்கள் கடைகளில் விற்கப்படும் குலாப் ஜாமூன் மிக்சர் வாங்கி தான் ஜாமூன் செய்திருப்பீர்கள். ஆனால் வீட்டில் உள்ள பிரட் கொண்டே அட்டகாசமான சுவையைக் கொண்ட பிரட் குலாப் ஜாமூன் செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், உங்கள் வீட்டில் பிரட் இருந்தால், பிரட் குலாப் ஜாமூனை முயற்சி செய்து பாருங்கள். இதை செய்வது மிகவும் சுலபம். அதோடு செம சூப்பராகவும் இருக்கும்.

உங்களுக்கு பிரட் குலாப் ஜாமூன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் குலாப் ஜாமூன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஜாமூன் செய்வதற்கு...
* பிரட் துண்டுகள் - 4
* பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* பால் - 3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் அல்லது நெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சர்க்கரை பாகு செய்வதற்கு...
* சர்க்கரை - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* குங்குமப்பூ - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அதைச் சுற்றியுள்ள ப்ரௌன் பகுதியை நீக்கிவிட வேண்டும். பின் பிரட் துண்டுகளை வெட்டி, அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் பொடித்த பிரட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பால் பவுடரை சேர்த்து கலந்து, மெதுவாக பாலை ஊற்றி, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் அல்லது நெய் சூடானதும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, சர்க்கரை நன்கு கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* சர்க்கரை பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து மீண்டும் 4-5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை பாகு ஒட்டும் பதத்தில் வரும் போது, அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, பின் பொரித்து வைத்துள்ள ஜாமூனை சேர்த்து கிளறி, 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, மூடி வைத்து 1 மணிநேரம் கழித்து பரிமாறினால், சுவையான பிரட் குலாப் ஜாமூன் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications