Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 கப் கருப்பு உளுந்து இருந்தா.. இந்த உருண்டையை செஞ்சு தினமும் 1 சாப்பிடுங்க.. மருந்து மாத்திரையே தேவைப்படாது..
Karuppu Ulundhu Urundai Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டவரா? அடிக்கடி அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஏதாவது செய்து கொடுப்பீர்களா? உங்கள் பிள்ளைகள் பலவீனமாக உள்ளார்களா? அதோடு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலியால் அவதிப்படுவார்களா?
அப்படியானால் கருப்பு உளுத்தம் பருப்பை வாங்கி, அதைக் கொண்டு உருண்டை செய்து கொடுங்கள். இப்படி உருண்டை செய்து, அதை தினமும் ஒன்று சாப்பிட கொடுத்து வந்தால், உடல் வலுபெறும் மற்றும் அனைத்து வலிகளும் நீங்கும். அதுவும் இந்த கருப்பு உளுந்து உருண்டையில் கவுனி அரிசியும் சேர்த்திருப்பதால், உடலுக்கு இன்னும் நல்லது.

உங்களுக்கு இந்த கருப்பு உளுந்து உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உடைத்த கருப்பு உளுத்தம் பருப்பு - 1 1/2 கப்
* கருப்பு கவுனி அரிசி - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 3/4 கப்
* சுக்கு - 1/4 டீஸ்பூன்
* வெல்ல பவுடர் - 1 1/2 கப்
* நல்லெண்ணெய் - 3/4 கப்
செய்முறை:
* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 முறை கழுவி விட்டு, நீரை
முழுமையாக வடிகட்ட வேண்டும்.
* பின் ஒரு துணியில் கழுவிய உளுத்தம் பருப்பை போட்டு, 2 மணிநேரம் காய
வைக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கழுவி காய
வைத்துள்ள உளுத்தம் பருப்பை சேர்த்து, நன்கு வறுக்க வேண்டும்.
* உளுத்தம் பருப்பின் நிறம் லேசாக மாறி நல்ல மணம் வந்ததும், அதை ஒரு
தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு கவுனி அரிசியை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, உளுத்தம் பருப்புடன்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் பொட்டுக்கடலையை சேர்த்து சிறிது நேரம்
வறுத்து, அதையும் உளுத்தம் பருப்புடன் சேர்த்து குளிர வைக்க
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து,
நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி,
லேசாக சூடானதும், அதை இறக்கி, அரைத்து வைத்துள்ள பொடியில் கொஞ்சம்
கொஞ்சமாக ஊற்றி, எண்ணெய் சூடாக இருப்பதால், கரண்டியால் கிளறி விட
வேண்டும்.
* கைபொறுக்கும் சூட்டிற்கு வந்தும், கைகளால் மாவை நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* இறுதியாக கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக
உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொண்டால், சுவையான கருப்பு உளுத்தம்
பருப்பு உருண்டை அல்லது கருப்பு உளுத்தம் பருப்பு லட்டு தயார்.



Click it and Unblock the Notifications