Latest Updates
-
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்..
எலும்பை வலுவாக்கும் கருப்பு உளுந்து அடை - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்..
Black Urad Dal Adai Recipe In Tamil: உங்களுக்கு இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் உள்ளதா? தினமும் இந்த வலிகள் உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்படியானால் உங்கள் உணவில் கருப்பு உளுத்தம் பருப்பை அதிகமாக சேர்த்து வாருங்கள். அதுவும் கருப்பு உளுத்தம் பருப்பைக் கொண்டு கஞ்சியாக செய்து குடிக்க பிடிக்காவிட்டால், அதைக் கொண்டு அடை செய்து சாப்பிடுங்கள்.
இப்படி அடை செய்யும் போது, அது சாப்பிட ருசியாக இருக்கும். அதுவும் இந்த அடைக்கு தேங்காய் சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும். ஒருமுறை இந்த கருப்பு உளுந்து அடையை செய்து சாப்பிட்டால், பின் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள். குறிப்பாக இது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற காலை டிபனும் கூட.

உங்களுக்கு கருப்பு உளுந்து அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு உளுத்தம் பருப்பு - 1 கப் அல்லது 250 கிராம்
* பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுத்தம் பருப்பை எடுத்து,
அத்துடன் பச்சரிசியை சேர்த்து நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சுடுநீரை ஊற்றி, குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* உளுத்தம் பருப்பு நன்கு ஊறியதும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, லேசாக
நீரை தெளித்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்து, அத்துடன் பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* பிறகு ஒரு பாலிதீன் கவர் அல்லது வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய்
தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி வைத்து, அடை
போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில்
தேங்காய் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ளதை சேர்த்து, முன்னும்,
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான உளுத்தம் பருப்பு
அடை தயார்.



Click it and Unblock the Notifications