Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
இட்லி, தோசைக்கு பீட்ரூட்டை வெச்சு ஒருமுறை இந்த மாதிரி சட்னி ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
Beetroot Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு ஒரு சத்தான அதே சமயம் சுவையான ஒரு சட்னி செய்ய நினைக்கிறீர்களா? எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து போரடித்துவிட்டதா? வீட்டில் பீட்ருட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ரூட்டைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னியை செய்யுங்கள்.
இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த பீட்ரூட் சட்னியை குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுத்தால், இரத்த சோகையைத் தடுக்கலாம்.

உங்களுக்கு பீட்ரூட் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 5-6
* வரமிளகாய் - 3
* புளி - 1 சிறிய துண்டு
* பீட்ரூட் - 2 மீடியம் சைஸ்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு, அவற்றை சிறு துண்டுகளாக
நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு,
வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து, நன்கு வறுத்து
இறக்கி, அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் பீட்ரூட்டை சேர்த்து, அத்துடன்
மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5
நிமிடம் மிதமான தீயில் வைத்து பீட்ரூட்டை வேக வைக்க வேண்டும்.
* பீட்ரூட் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு அவற்றை குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் குளிர வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து, நீர் ஊற்றாமல்,
சற்று கொரகொரவென்று அரைத்தால், சுவையான பீட்ரூட் சட்னி அல்லது
பீட்ரூட் துவையல் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications
