Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
மதியம் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி புலாவ் செய்யுங்க...
Beetroot Pulao Recipe In Tamil: உங்களுக்கு மதிய வேளையில் வேகமாக சமையலை முடிக்க வேண்டுமா? அதுவும் சிம்பிளாக அதே சமயம் ருசியான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ரூட்டைக் கொண்டு அட்டகாசமான சுவையில் புலாவ் செய்யுங்கள். இந்த பீட்ரூட் புலாவ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.
முக்கியமாக இந்த புலாவ் ரெசிபி ஒரு மிகச்சிறந்த மற்றும் ஈஸியான லன்ச் பாக்ஸ் ரெசிபியாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் ஒருவர் மட்டும் இருந்து, மதிய வேளையில் சிம்பிளாக சமைத்து சாப்பிட நினைத்தால், இந்த ஒன்-பாட் ரெசிபியை செய்து சாப்பிடலாம். இப்படி செய்தால் பீட்ரூட் சாப்பிட பிடிக்காதவர்களும், இந்த பீட்ரூட் புலாவ்வை அள்ளிப் போட்டு நொடியில் காலி செய்வார்கள்.

உங்களுக்கு பீட்ரூட் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* புதினா - 1 கைப்பிடி
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பீட்ரூட் - 1 (துருவியது)
* தயிர் - 2 டீஸ்பூன்
* பாசுமதி அரிசி - 1 கப் (2 கப் நீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் ஒருமுறை கழுவி விட்டு, பின்
அதில் 2 கப் நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,
பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 கைப்பிடி புதினாவை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அதோடு மஞ்சள்
தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தயிரை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 2 கப் நீரில் ஊற வைத்த பாசுமதி அரிசியை நீருடன்
அப்படியே சேர்த்து கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால்,
சுவையான பீட்ரூட் புலாவ் தயார்.



Click it and Unblock the Notifications