Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
1/2 கப் கோதுமை மாவுடன் 1 பீட்ரூட் சேர்த்து இப்படி காலையில் வித்தியாசமான ஒரு டிபன் செஞ்சு கொடுங்க...
Beetroot Appam Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை என்று செய்து போரடித்து விட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோர் இப்படி இட்லி, தோசையை சாப்பிட்டு, தற்போது அதை சாப்பிட மறுக்கிறார்களா? அப்படியானால் தினமும் இட்லி, தோசை செய்யாமல், அவ்வப்போது சற்று புதுமையான காலை உணவு ரெசிபிக்களையும் ட்ரை செய்யலாம் அல்லவா?
அப்படிப்பட்ட ஒரு புதுமையான காலை உணவு டிபன் தான் பீட்ரூட் அப்பம். இப்படி பீட்ரூட் கொண்டு அப்பம் செய்யும் போது, பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளும் பீட்ரூட்டை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த அப்பம் அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பீட்ரூட் அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1/2 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* பெரிய பீட்ரூட் - 1 (துருவியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* தயிர் - 2 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் அரிசி மாவை சேர்த்து, துருவிய பெரிய பீட்ரூட்டையும்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி,
கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் தயிர், உப்பு மற்றும் பெருங்காயத் தூளை சேர்க்க
வேண்டும்.
* அடுத்து தேவையான அளவு நீரை ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒவ்வொரு
கரண்டியாக எடுத்து எண்ணெயில் அப்பம் போன்று ஊற்றி, முன்னும், பின்னும்
வேக வைத்து எடுத்தால், பீட்ரூட் அப்பம் தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications
