Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது!
பீட்ரூட் ஆலு கட்லெட்
உங்கள் குழந்தைகள் உங்களிடம் கட்லெட் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான பீட்ரூட் ஆலு கட்லெட் செய்யுங்கள்.
மாலை வேளையில் வடை, பஜ்ஜி, பக்கோடா சாப்பிட்டு அலுத்துவிட்டதா? உங்கள் குழந்தைகள் உங்களிடம் கட்லெட் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான பீட்ரூட் ஆலு கட்லெட் செய்யுங்கள். இந்த கட்லெட் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது ஆரோக்கியமான ஸ்நாக்ஸும் கூட. அதோடு இது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுக்க ஏற்றதாகவும் இருக்கும்.

உங்களுக்கு பீட்ரூட் ஆலு கட்லெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் ஆலு கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய பீட்ரூட் - 1 கப்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் துருவிய பீட்ரூட்டை எடுத்து, அதில் உள்ள அதிகப்படியான ஜூஸை கையால் பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் வேகர்க்கடலை, மாங்காய் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரக தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கையால் பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் கையில் சிறிது நெய்யைத் தடவி, பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி, கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1-2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள கட்லெட் துண்டுகளை வைத்து முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், பீட்ரூட் ஆலு கட்லெட் தயார்.



Click it and Unblock the Notifications
