Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
காலையில் இத 2 கப் சாப்பிடுங்க.. உடல் எடை மடமடன்னு குறையும்.. நாள் முழுவதும் சுறுசுறுப்பாவும் இருப்பீங்க..
Barley Kichdi Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கீங்களா? தினமும் டயட் என்ற பெயரில் காலையில் சரியாக சாப்பிடுவதில்லையா? இப்படி சரியாக சாப்பிடாமல் இருப்பதால், நாள் முழுவதும் சோர்வுடனேயே இருக்க வேண்டியுள்ளதா?
அப்படியானால் இனிமேல் காலையில் பார்லியை கொண்டு கிச்சடி செய்து சாப்பிடுங்கள். இந்த பார்லி கிச்சடி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறைக்க உதவும். முக்கியமாக இந்த கிச்சடியை காலையில் சாப்பிடும் போது, நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.

உங்களுக்கு பார்லி கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பார்லி கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* பார்லி அரிசி - 1/2 கப்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 6 கப்
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* முந்திரி - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் 1/2 கப் பார்லி அரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரில் 1/2 கப் பாசிப் பருப்பை எடுத்து, அதில் ஊற
வைத்துள்ள பார்லியை நீருடன் ஊற்றி நன்கு கைகளால் பிசைந்து, நீரை
வடிகட்டிவிட்டு, மீண்டும் நீரில் 2 முறை அலசி நீரை முற்றிலும் வடித்து
விட வேண்டும்.
* பின்பு அத்துடன் நறுக்கிய வெங்காயம், கேரட், தக்காளி, பூண்டு, பச்சை
மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி சாம்பார் தூள், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, 6 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 6 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு நன்கு மசித்து விட
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
சீரகம், மிளகு, பெருங்காயத் தூள், முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, கிச்சடியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பார்லி கிச்சடி
தயார்.



Click it and Unblock the Notifications
