Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
2 வாழைப்பழமும் 1/4 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்வீட் செய்யுங்க.. டேஸ்டியா இருக்கும்...
Banana Rava Sweet Recipe In Tamil: மாலை வேளையில் ஸ்வீட் ஏதாவது சாப்பிட தோன்றுகிறதா? உங்கள் வீட்டில் உள்ளோரும் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் நன்கு கனிந்த வாழைப்பழம் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைப்பழத்துடன் ரவையை சேர்த்து ஒரு அருமையான ஸ்வீட் செய்யுங்கள்.
இந்த ஸ்வீட்டை நெய் சேர்த்து செய்யும் போது வீடே மணக்கும். செய்து கொண்டிருக்கும் போதே வீட்டில் உள்ளோர் அனைவரும் வரிசை கட்டி சமையலறையில் வந்து நிற்பார்கள். அந்த அளவில் இதன் சுவையும், மணமும் ஆளை மயக்கும் அளவில் இருக்கும்.

உங்களுக்கு வாழைப்பழ ரவா ஸ்வீட் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ ரவா ஸ்வீட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த வாழைப்பழம் - 2
* நெய் - 1 ஸ்பூன்
* ரவை - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* காய்ச்சிய பால் - 1/2 கப்
* சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* நெய்/எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் நன்கு கனிந்த 2 வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதன் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்கி வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் 1/4 கப் ரவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* அடுத்து தேங்காயை சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் காய்ச்சிய பாலை சேர்த்து நன்கு ஒன்று சேரும் வரை கிளறி
விட வேண்டும்.
* பின் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி
இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* கலவையானது கைபொறுக்கும் சூட்டிற்கு ஆறியதும், அதை சிறு சிறு
உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நெய்/எண்ணெய் ஊற்றி சூடானதும், இந்த உருண்டைகளைப் போட்டு, பொன்னிறமாக
ப்ரை செய்து எடுத்தால், சுவையான வாழைப்பழ ரவா ஸ்வீட் தயார்.
Image Courtesy: Flavourful time



Click it and Unblock the Notifications
