Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பக்ரீத் ஸ்பெஷல் ஆம்பூர் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Bakrid Special Ambur Mutton Biryani Recipe In Tamil: பக்ரீத் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உங்கள் வீட்டில் மட்டன் பிரியாணி செய்யப் போகிறீர்களா? அப்படியானால் ஒரே மாதிரியான சுவையில் எப்போதும் மட்டன் பிரியாணியை செய்யாமல் ஒருமுறை ஆம்பூர் ஸ்டைல் மட்டன் பிரியாணியை செய்யுங்கள்.
இந்த மட்டன் பிரியாணிக்கு சீரக சம்பா அரிசியை தனியாக வேக வைத்து வடித்து சேர்த்து, தம் போட வேண்டும். இந்த ஆம்பூர் மட்டன் பிரியாணியை உங்கள் வீட்டில் செய்தால், நிச்சயம் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

உங்களுக்கு பக்ரீத் ஸ்பெஷலாக ஆம்பூர் மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சீரக சம்பா அரிசி - 1 கிலோ
* நெய் - 100 கிராம்
* ஏலக்காய் - 5
* பட்டை - 5 துண்டு
* கிராம்பு - 10
* கடலை எண்ணெய் - 150 மிலி
* பெரிய வெங்காயம் - 450 கிராம் அல்லது 6-7 (நீளவாக்கில் மெல்லியதாக
நறுக்கியது)
* பூண்டு - 100 கிராம் (அரைத்தது)
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி - 100 கிராம் (அரைத்தது)
* வரமிளகாய் - 15 (நீரில் ஊற வைத்து அரைத்தது)
* உப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 450 கிராம் (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 250 மிலி
* மட்டன் - 1 கிலோ
* தண்ணீர் - 800 மிலி
சாதத்திற்கு...
* தண்ணீர் - 2 1/2 லிட்டர்
* உப்பு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின்
நீரை ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பிரியாணி செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில்
வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், அதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கடலை எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,
பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த பூண்டு விழுதை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பேஸ்ட்டை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து நீரில் ஊற வைத்த 15 வரமிளகாயை அரைத்து பேஸ்ட் செய்து
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து
நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தயிரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மட்டனை கழுவி சேர்த்து நன்கு மசாலா மட்டனுடன் சேரும் வரை
நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 800 மிலி நீரை ஊற்றி நன்கு கிளறி, மூடி வைத்து, உயர்
தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, பின் தீயைக் குறைத்து 20 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சாதத்தை
வடிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 2 1/2 லிட்டர் நீரை ஊற்றி வைத்து, மூடி
வைத்து, நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதித்ததும், மூடியைத் திறந்து, 2 டேபிள் ஸ்பூன் உப்பை
சேர்த்து, சீரக சம்பா அரிசியில் உள்ள நீரை வடிகட்டி விட்டு சேர்த்து
கிளறி, மூடி வைத்து, 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். சீரக சம்பா அரிசி
3-4 நிமிடத்தில் வெந்துவிடும். எனவே அருகில் இருந்து பார்த்து
பக்குவமாக சாதத்தை இறக்கி வடிகட்டுங்கள். சாதத்தின் பக்குவம் என்றால்,
அரிசியை அழுத்தும் போது எளிதில் உடையும். அப்படி இருந்தால், உடனே
வடிகட்டிவிட வேண்டும்.
* பின்பு மற்றொரு அடுப்பில் உள்ள மூடியைத் திறந்து, அதில் வடித்து
வைத்துள்ள சாதத்தை சூடாக இருக்கும் போதே சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின் உப்பு, புளிப்பு சுவை பார்க்க வேண்டும். ஒருவேளை புளிப்பு
போதவில்லை என்றால், பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் மூடி வைத்து, அதன் மேல் சுடுநீர் நிரப்பிய பாத்திரத்தை வைத்து,
உயர் தீயில் வைத்து 2 நிமிடம் வேக வைத்து, பின் தீயைக் குறைத்து 15
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அடுப்பை அணைத்து விட
வேண்டும். பின் கரண்டியால் கிளறி விட்டு பரிமாறினால், சுவையான ஆம்பூர்
மட்டன் பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications





