Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
பேச்சுலர்களுக்கான... சிம்பிளான.. அதே சமயம் டேஸ்டியான தேங்காய் சாதம்.. எப்படி செய்றதுன்னு பாருங்க...
Coconut Rice Recipe In Tamil: இன்று பேச்சுலர்கள் பலரும் தங்கள் வீட்டை விட்டு வெளியூர்களில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இதில் நிறைய பேர் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தனியாக வீடு எடுத்து, தாங்களாகவே சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். நீங்களும் அப்படிப்பட்டவர்களுள் ஒருவரா? ஆனால் உங்களுக்கு அதிகம் சமைக்க தெரியாதா? எப்போதும் ஒரே சுவையில் தான் சமைத்து சாப்பிடுவீர்களா?
நீங்கள் பேச்சுலர் என்றால், அதுவும் சிம்பிளாக ஒரு சுவையான வெரைட்டி ரைஸ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தேங்காய் சாதம் செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்யும் தேங்காய் சாதத்தைப் போல் செய்யாமல், ஒருமுறை இந்த ஸ்டைலில் செய்யுங்கள். சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இந்த தேங்காய் சாதம் ஒரு சிறந்த லன்ச் பாக்ஸ் ரெசிபியாகவும் இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வடித்த சாதம் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சாதத்தை வடித்து தனியாக ஒரு தட்டில் போட்டு குளிர
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து, ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் துருவிய தேங்காயை சேர்த்து குறைவான தீயில்
வைத்து, பொன்னிறமாகும் வரை வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு,
தேங்காயையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து
பொன்னிறமாக வறுத்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான
தேங்காய் சாதம் தயார்.



Click it and Unblock the Notifications











