Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
அவரைக்காய் வாங்குனா இந்த மாதிரி தொக்கு செஞ்சு பாருங்க... சாதத்தோட சாப்பிட சூப்பர் சைடிஷா இருக்கும்...!
Avarakkai Thokku Recipe in Tamil: தினமும் மதியம் அல்லது இரவு என்ன சமைப்பதென்று ஒரே குழப்பமாக இருக்கிறதா ? உங்கள் வீட்டில் அவரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த அவரைக்காயை வைத்து தொக்கு செய்யுங்கள். இந்த அவரைக்காய் தொக்கு சப்பாத்தி, இட்லி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த அவரைக்காய் தொக்கு செய்வது மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட இந்த அவரைக்காய் தொக்கை எளிதில் செய்து விடலாம். இந்த தொக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் சுவையில் இருக்கும்.
அவரைக்காயை அடிக்கடி உணவில் சேர்க்கும் போது இதயம் ஆரோக்கியமாக இருக்கும், புற்றுநோயின் அபாயம் குறையும், செரிமானம் மேம்படும், எடை இழப்பிற்கும் உதவும், மேலும் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இவ்வளவு நன்மைகளைக் கொண்ட அவரைக்காயை நீங்கள் அடிக்கடி சாப்பிடமாட்டீர்கள் என்றால், இனிமேலாவது சாப்பிடத் தொடங்குங்கள்.

உங்களுக்கு அவரைக்காயை வைத்து எப்படி தொக்கு செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவரைக்காய் தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் அவரைக்காய், நறுக்கியது
- 1 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 ஸ்பூன் சாம்பார் பொடி
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
தாளிக்க:
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் அவரைக்காயை மேலும், கீழும் நறுக்கி நாரை நீக்கிவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- பொரியலுக்கு நறுக்குவதை விட கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் அதில் உளுந்தம் பருப்பை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள் மற்றும் சாம்பார் பொடியைச் சேர்க்கவும்.
- தக்காளி குழையும் அளவிற்கு வேகும் வரை நன்கு வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய அவரைக்காயை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- நன்றாக கலந்து மிதமான தீயில் மூடி வைத்து 5 முதல் 8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்.
- காய் நன்றாக வேகும் வரை காத்திருக்கவும். விரல்களில் நசுக்கினால் காய் உடையும் அளவிற்கு காய் நன்றாக வெந்திருக்க வேண்டும்.
- அதன்பின் மேலே இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி நன்றாக கிளறி விடவும்.
- தண்ணீர் முழுவதுமாக வற்றி காய் நன்றாக வெந்து பளபளப்பாக இருக்கும் போது அடுப்பை அணைக்கவும்.



Click it and Unblock the Notifications