Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
தோசை மாவு இல்லாத நேரத்தில் ஒரு கப் அவல் இருந்தாலே போதும்.. காலையில் அட்டகாசமான ப்ரேக்ஃபாஸ்ட் செய்யலாம்...
Aval Roti Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை சுட மாவு இல்லையா? என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இன்று மிகவும் லேட்டாக எழுந்துவிட்டீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலைக் கொண்டு அற்புதமான சுவையில் ஒரு காலை உணவை செய்யலாம்.
அது தான் அவல் ரொட்டி. இந்த அவல் ரொட்டி சத்தானது மட்டுமின்றி, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இதற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று அனைத்துமே அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு அவல் ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் ரொட்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 1 கப்
* பச்சரிசி மாவு - 3/4 கப்
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் அவலை போட்டு, அதை நீரில் 2 முறை அலசி
நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க
வேண்டும். அதேப் போல் பாசிப்பருப்பையும் நீரில் 5 நிமிடம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் 5 நிமிடம் ஆனதும் மூடியைத் திறந்து, அவலை தொட்டுப் பார்த்தால்,
அது நன்கு மென்மையாகி இருக்கும். இப்போது கைகளால் அவவை நன்கு மசித்து
விட வேண்டும். அதேப் போல் பாசிப்பருப்பையும் கழுவி நீரை
வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அவலுடன் பச்சரிசி மாவு, ஊற வைத்த பாசிப்பருப்பு, பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தயிர், தேங்காய்,
கறிவேப்பிலை, சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்கு
பிசைந்து விட வேண்டும்.
* பிறகு சிறிது நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் பிசைந்த மாவை சிறிது சிறிதாக எடுத்து உருண்டைகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் தடவி ஒரு உருண்டையை
எடுத்து வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி
வைத்துள்ளதை சேர்த்து, எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் பொன்னிறமாக
வேக வைத்து எடுத்தால், சுவையான அவல் ரொட்டி தயார்.
Image Courtesy: Subbus Kitchen



Click it and Unblock the Notifications
