Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் சூரியன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்!
இட்லி தோசை செஞ்சு போரடிச்சுடுச்சா? அப்ப 1 கப் அவல் வெச்சு ஒரு புதுமையான சுவையில் இந்த ரெசிபியை செய்யுங்க...
Aval Kara Puttu Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று புதுமையாக அதே சமயம் அட்டகாசமான சுவையில் ஒரு காலை உணவு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலைக் கொண்டு ஒரு சுவையான கார புட்டு செய்யுங்கள்.
இந்த அவல் கார புட்டு ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு அவல் கார புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் கார புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
புட்டு செய்வதற்கு...
* அவல் - 1 கப்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - 3 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு . சுவைக்கேற்ப
* பன்னீர் - 50 கிராம் (துருவியது)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் அவலை போட்டு நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த அவலை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன்
நீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து
கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த புட்டு மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து, 5 நிமிடம் வேக
வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வேர்க்கடலை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து, வெங்காயம்
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறிவிட
வேண்டும்.
* பின்பு அதில் துருவிய பன்னீரை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக செய்து வைத்துள்ள புட்டு சேர்த்து நன்கு மசாலா அனைத்தும்
புட்டுடன் ஒன்று சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான அவல் கார
புட்டு தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications