Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்..
Bird Personality Test: பறவைகள் சார்ந்த பர்சனாலிட்டி டெஸ்ட்கள் இன்று சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. குறிப்பாக, புறா அமைதி, நம்பிக்கை, அன்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுவதால், இந்த பறவைகள் சார்ந்த பர்சனாலிட்டி டெஸ்ட்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இங்கு 3 விதமான புறாக்களைக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான படம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 3 விதமான புறாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உங்கள் மனம் முதலில் எந்த புறாவை தேர்ந்தெடுக்கிறதோ, அது உங்கள் வாழ்க்கையில் அடுத்த 3 நாட்களில் என்ன நடக்கும் என்பதற்கான சுவாரஸ்யமான குறிப்பை வெளிப்படுத்தும்.
அதற்கு இந்த படத்தில் உள்ள ஒரு புறாவை எந்தவித யோசனையும் இல்லாமல் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் உள்ளுணர்வு தேர்ந்தெடுக்கும் அந்தப் புறா, உங்கள் மனநிலை, எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்வரும் நாட்களில் உங்களைச் சுற்றி நிகழக்கூடிய சம்பவங்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கூறும் என்று நம்பப்படுகிறது. இது அறிவியல் அடிப்படையிலான கணிப்பு அல்ல என்றாலும், பொழுதுபோக்கிற்காகவும் சுயபரிசோதனைக்காகவும் பலர் இதனை ரசிக்கின்றனர்.
சரி, இப்போது உங்கள் மனதை கவரும் புறாவைத் தேர்ந்தெடுத்து, அடுத்த மூன்று நாட்கள் உங்களுக்காக என்ன ஆச்சரியங்களை வைத்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
புறா #1
இந்த படத்தில் நீங்கள் முதல் புறாவை தேர்ந்தெடுத்து இருந்தால், நீண்ட காலமாக ஒரு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தால், அடுத்த 3 நாட்களில் எதிர்பார்த்த நல்ல செய்தியைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள விஷயத்தில், நீங்கள் நேர்மறையான பதிலைப் பெற வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்கள் எதிலும் நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து பின்தொடரவும், சீராகச் செயல்படவும் தயங்காதீர்கள். இது நீங்கள் முன்னேறுவதற்கான காலம்.
புறா #2
இந்த படத்தில் நீங்கள் 2 ஆவது புறாவை தேர்ந்தெடுத்து இருந்தால், அடுத்த 3 நாட்கள் அமைதியை கையாள வேண்டும். ஏனெனில் ஒரு சிறிய விஷயம் உங்களின் பொறுமையை சோதிக்கும். அதற்கு அதிகமாக உணர்ச்சிவசப்படாமல் செயல்பட்டால், விளைவு வேறுவிதமாக இருக்கும். எனவே எந்த ஒரு விஷயத்தை செய்யும் முன் யோசியுங்கள். உங்களின் மனநிலை தெளிவாக இல்லாவிட்டாலோ அல்லது எங்கேனும் சிக்கிக் கொண்டதாக நினைத்தாலோ, பேச்சிலும், செயல்பாட்டிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
புறா #3
இந்த படத்தில் நீங்கள் 3 ஆவது புறாவை தேர்ந்தெடுத்து இருந்தால், நீங்கள் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இந்த படத்தில் உள்ள புறா வைத்துள்ள கடிதம் மஞ்சள் நிறத்தில் இருப்பதால், அது மன அமைதியைக் குறிக்கிறது. அடுத்த 3 நாட்கள் உங்கள் அன்புக்குரியவர் அல்லது நண்பர்களிடம் இருந்து மனதிற்கு அமைதியையும், சந்தோஷத்தையும் தரக்கூடிய நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இக்காலத்தில் நீங்கள் சமூக தொடர்புகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்க வேண்டும். மொத்தத்தில் உங்கள் வாழ்வில் ஒருவர் உங்களுக்கு நல்ல செய்தியை சொல்வார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
