Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
1/2 கப் அவல் இருந்தா போதும்.. 10 நிமிடத்தில் சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Aval Burfi Recipe In Tamil: விடுமுறை என்பதால் வீட்டில் உள்ள குழந்தைகள் எந்நேரமும் சாப்பிட ஏதாவது கேட்பார்கள். அதுவும் உங்கள் குழந்தைகள் இனிப்புக்களை அதிகம் விரும்பி சாப்பிடுபவராயின், அவருக்கு கடைகளில் விற்கப்படும் ஸ்வீட்டுகளை வாங்கிக் கொடுக்காமல், முடிந்தவரை வீட்டிலேயே ஸ்வீட் செய்து கொடுங்கள்.
அதுவும் உங்கள் வீட்டில் 1/2 கப் அவல் இருந்தால் மாலை வேளையில் அற்புதமான பர்பி ஸ்வீட் செய்து கொடுங்கள். இந்த ஸ்வீட்டை 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த அவல் பர்பியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் பர்பி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த வேர்க்கடலை - 1 கப்
* அவல் - 1/2 கப்
* எள்ளு - 2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 3
* நெய் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 4
* பாதாம் - 4
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அவலை சேர்த்து,
ஈரப்பதம் போகும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியில் எள்ளு விதைகளை சேர்த்து வறுத்து, அதை அவலுடன்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து நன்கு பொடி
செய்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே ஜாரில் வறுத்த அவல் மற்றும் எள்ளு விதைகளை சேர்த்து
நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தைப் போட்டு, 1 கப் நீரை
ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், அதை இறக்கி வடிகட்டிக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கிப் போட்டு வறுத்து, ஒரு கிண்ணத்தில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் வெல்ல பாகுவை ஊற்றி நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், வேர்க்கடலை பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் அவல் பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அவல்
சேர்த்ததும், கலவையானது கெட்டியாகத் தொடங்கும். இப்போது அதில் வறுத்த
பாதாம், முந்திரியை சேர்த்து கிளறி விட வேண்டும். அவலானது கடாயில்
ஒட்டாமல் உதிர்ந்து வரும் போது அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின் ஒரு அகலமான தட்டில் நெய் தடவி, அதில் இந்த அவலை சேர்த்து
தட்டையாக தட்டி குளிர வைத்து, பின் கத்தியால் துண்டுகளாக்கினால்,
சுவையான அவல் பர்பி தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications