Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மழை நேரத்துல ஒருடைம் ரசத்தை இப்படி அரைச்சு வெச்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Arachuvitta Rasam Recipe In Tamil: மழை பெய்யும் போது சூடான சாதத்துடன் ரசம் ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இந்த ரசத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடன் அருமையாக இருக்கும். என்ன தான் ரசம் ஒரு சிம்பிளான ரெசிபியாக இருந்தாலும், அனைவராலும் அதை சுவையாக செய்ய முடியாது.
சிலர் என்ன தான் ரசம் வைத்தாலும், சுவையாகவே இருக்காது. மேலும் தற்போது பெரும்பாலான வீடுகளில் கடைகளில் விற்கப்படும் ரசப்பொடியைக் கொண்டு தான் ரசம் செய்யப்படுகிறது. ஆனால் ரசத்திற்கு மசாலா அரைத்து செய்யும் போது அதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு அரைச்சுவிட்ட ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைச்சுவிட்ட ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - 1 எலுமிச்சை அளவு
வறுத்து அரைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வரமிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 3
ரசத்துக்கு...
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 5 பல்
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் துவரம் பருப்பை
சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் மல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, வரமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து முதலில் பொடித்து,
பின் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஊற வைத்த புளியை கைகளால் நன்கு பிசைந்து ஒரு பாத்திரத்தில்
புளி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த புளி நீரில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து தக்காளியை அரைத்து அந்த புளிச்சாற்றுடன் சேர்த்து, தேவையான
அளவு நீரை ஊற்றி, அத்துடன் சிறிது கொத்தமல்லியைத் தூவி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வரமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
கொதிக்க ஆரம்பித்ததும், கரைத்து வைத்துள்ள புளி நீரை ஊற்றி, பூண்டு
பற்களை தட்டிப் போட்டு, நுரைக்க தொடங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு
இறக்கினால், சுவையான அரைச்சுவிட்ட ரசம் தயார்.



Click it and Unblock the Notifications