Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இப்படி ரசம் வெச்சா.. குழம்பு கூட தேவைப்படாது.. அவ்வளவு ருசியா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க...
Arachuvitta Rasam Recipe In Tamil: மதிய வேளையில் உங்களுக்கு சமைக்க பிடிக்கவில்லையா? தினமும் சாம்பார், புளிக்குழம்பு செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அதற்காக சமைக்காமல் இருக்க முடியாது தான். ஆனால் சிம்பிளாக டக்கென்று ஒரு சமையலை செய்ய நினைத்தால், அரைச்சுவிட்ட ரசத்தை செய்யுங்கள்.
இந்த அரைச்சுவிட்ட ரசம் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இதை செய்தால் எந்த ஒரு குழம்பும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கூட்டு, பொரியல் செய்தால் போதும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு அரைச்சுவிட்ட ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைச்சுவிட்ட ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - பெரிய எலுமிச்சை அளவு (2 கப் நீரில் ஊற வைத்து சாறு
எடுத்துக் கொள்ளவும்)
* தண்ணீர் - 2 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு....
* நெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 5-6 பல்
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் பெரிய எலுமிச்சை அளவு புளியை எடுத்து 2 கப் நீரில் ஊற
வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, மல்லி, மிளகு, சீரகம்,
வரமிளகாய் ஆகியவற்றை நீரில் 2 முறை கழுவிவிட்டு, அதில் நீரை ஊற்றி, 15
நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, ஊற வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு,
அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், தக்காளியை சேர்த்து, அத்துடன் உப்பு சிறிது சேர்த்து
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* புளிச்சாறு நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை
சேர்த்து, அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து 2 கப் நீரை ஊற்றி கலந்து,
நுரை கட்டி ஒரு கொதி வந்ததும், அதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து, அத்துடன் பூண்டு
பற்களை தட்டிப் போட்டு, வரமிளகாயையும் சேர்த்து வதக்கி, ரசத்துடன்
சேர்த்து கிளறினால், சுவையான அரைச்சுவிட்ட ரசம் தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications