Latest Updates
-
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
வீட்டுல காய் இல்லாத நேரத்துல வெறும் அப்பளம் வெச்சு இப்படி குழம்பு செய்யுங்க.. ருசி சும்மா அள்ளும்...
Appala Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் வீட்டில் சமைக்க காய்கறிகள் எதுவும் இல்லையா? வெளியே சென்று காய்கறி வாங்கி வந்து சமைக்க சோம்பேறித்தனமாக இருக்குதா? உங்கள் வீட்டில் அப்பளம் உள்ளதா? அப்படியானால் அந்த அப்பளத்தைக் கொண்டு அட்டகாசமான சுவையில் குழம்பு செய்யுங்கள்.
இந்த அப்பள குழம்பு சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு 15 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு அப்பள குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அப்பள குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10-12 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 10 பல் (நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* தேங்காய் பால் - 1/2 கப்
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* அப்பளம்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் அப்பளத்தைப் பொரித்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் புளியை நீரில் ஊற வைத்து, அதையும் சாறு எடுத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு
சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள்
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத்
தூள் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின் அதில் 1 கப் நீரை ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாறு மற்றும் தேங்காய் பால் சேர்த்து, 5-6
நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி 1 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கி விட வேண்டும்.
* இறுதியாக அப்பளத்தை நொறுக்கி குழம்புடன் சேர்த்து கிளறி, 2 நிமிடம்
ஊற வைத்தால், சுவையான அப்பள குழம்பு தயார்.
Image Courtesy: Gomathi's Kitchen



Click it and Unblock the Notifications
