Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஆந்திரா டிபன் சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்...
Andhra Tiffen Chutney Recipe In Tamil: காலை உங்கள் வீட்டில் எப்போதும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு ஒரே மாதிரி மற்றும் ஒரே சுவையில் சட்னி செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அதே சமயம் சட்டென்று ஒரு சட்னியை செய்ய வேண்டுமா? அப்படியானால் ஆந்திரா டிபன் சட்னியை செய்யுங்கள்.
இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். இந்த சட்னியை செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த சட்னியை பேச்சுலர்கள், வேலைக்கு செல்பவர்கள் தெரிந்து வைத்துக் கொண்டால் அவசர காலத்திற்கு கைக்கொடுக்கும்.

உங்களுக்கு இந்த ஆந்திரா டிபன் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா டிபன் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* பெரிய தக்காளி - 3
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/4 டம்ளர் + தேவையான அளவு
* வறுத்த வேர்க்கடலை - 2 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், மல்லி சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய 3 பெரிய தக்காளியை
சேர்த்து கிளறி, மூடி வைத்து, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்
* அதன் பின் அதில் புளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து கிளறி, 1/4
டம்ளர் நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து, தக்காளி மென்மையாகும் வரை வேக
வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்த பொருட்களை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேணடும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான ஆந்திரா
டிபன் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
