Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆந்திரா தக்காளி பச்சடி ரெசிபி... இட்லி, தோசைக்கு இதை செஞ்சா எவ்வளவு சுட்டாலும் பத்தாது... ட்ரை பண்ணுங்க...!
Andhra Thakkalai Pachadi Recipe in Tamil: இட்லி, தோசை செய்வது எவ்வளவு எளிதானதோ அதற்கு என்ன சட்னி செய்வது என்று சிந்திப்பது மிகவும் சிரமமானது. இட்லி, தோசைக்கு வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவற்றைத்தான் பெரும்பாலும் செய்வோம். இது நாளடைவில் சலிப்பை ஏற்படுத்தும். எனவே புதுப்புது சட்னிகள் செய்வது மிகவும் அவசியமானதாகும்.
ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி இட்லி, தோசைக்கு சிறப்பான சைடிஷாக இருக்கும். ஆந்திரா தக்காளி பச்சடி என்பது தக்காளி, மிளகாய், பூண்டு, மசாலா மற்றும் புளி சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான சட்னியாகும். இந்த காரசாரமான தக்காளி பச்சடியை இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

ஆந்திர மக்கள் இந்த தக்காளி பச்சடியை சாதத்தில் போட்டு அதில் நெய் ஊற்றி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் காரசாரமான ஆந்திரா தக்காளி பச்சடியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 4 வர மிளகாய் (காரத்துக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம்)
- 2 கப் நறுக்கிய தக்காளி
- ¾ ஸ்பூன் கடலை பருப்பு
- ¾ ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- ½ ஸ்பூன் உப்பு (சுவைக்கு ஏற்ப)
- ½ ஸ்பூன் சீரகம்
- ½ ஸ்பூன் மஞ்சள்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 2 பல் பூண்டு
- 1 சிறிய துண்டு இஞ்சி
தாளிக்க:
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 வர மிளகாய்
- 1 சிட்டிகை சீரகம்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 2 பல் நசுக்கிய பூண்டு
தயாரிக்கும் முறை:
- ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கவும். வர மிளகாய், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்க்கவும். அவை பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். சிவப்பு மிளகாய் மொறுமொறுப்பாக மாற வேண்டும்.
- பின்னர் சீரகத்தைச் சேர்த்து சில நொடிகள் வறுக்கவும். அதை ஓரமாக எடுத்து வைக்கவும்.
- அதே கடாயில், தக்காளி, பூண்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். தக்காளி முற்றிலும் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும் வரை வதக்கவும். பின்னர் ஆறும்படி ஓரமாக எடுத்து வைக்கவும்.
தக்காளி பச்சடி செய்ய:
- வறுத்த மிளகாய், பருப்பு மற்றும் சீரகத்தை ஒரு கிரைண்டரில் சேர்த்து நன்றாக பொடி செய்யவும்.
- பின்னர் தக்காளி சேர்த்து அரைக்கவும். நன்கு சட்னி போல மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
- உப்பு சரிபார்த்து ஒரு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிக்க:
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். பின்னர் நசுக்கிய பூண்டை சேர்க்கவும். கறிவேப்பிலை மொறுமொறுப்பாக மாறியதும். அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் பச்சடியை வாணலியில் சேர்த்து நன்கு கலக்கவும்.
- சூப்பரான ஆந்திரா தக்காளி பச்சடி ரெடி. இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications