Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி ரெசிபி... இது இட்லி, தோசை மற்றும் சாதத்துக்கு கூட சூப்பராக இருக்கும்...!
Andhra Thakkali Pachadi Recipe in Tamil: பெரும்பாலும் வீட்டில் இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் செய்வோம். சில நேரங்களில் தங்கத்தின் விலை விற்கும் தக்காளி விலை குறையும் போது தக்காளி குழம்பு, தக்காளி குருமா, தக்காளி தொக்கு, ஏன் தக்காளி ஊறுகாய் கூட செய்வோம்.
அதே சமயம் தக்காளி பச்சடியும் செய்வோம். இது மிகவும் எளிதாக இருப்பதால் பலரும் நேரத்தை மிச்சமாக்க இதை செய்வதுண்டு. அதே தக்காளி பச்சடியை ஆந்திரா ஸ்டைல் சுவையாக எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- தக்காளி - 2 பெரியது அல்லது 4 சிறியது
- வரமிளகாய் - 3 -4(காரத்திற்கு ஏற்ப கூட்டி குறைத்து கொள்ளவும்)
- வெள்ளை எள்ளு - 2 டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¾ டேபிள் ஸ்பூன்
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
- வரமிளகாய் - 1
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்
- பூண்டு - 10-12 பல்
செய்முறை:
- நன்றாக பழுத்த தக்காளியை தண்ணீரில் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி
கொள்ளவும்.
- பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- இஞ்சியை சுத்தமாக கழுவி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி
வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் சேர்க்கவும்.
- அதனுடன் வரமிளகாய், உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்கவும்.
- அதில் எள்ளு மற்றும் சீரகம் சேர்த்து மிதமாக வறுத்து ஆற
வைக்கவும்.
- அதே வாணலியில் தக்காளி, இஞ்சி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து
நன்றாக வதக்கவும்.
- தக்காளி நன்றாக மசியும் வரை வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வதக்கி வாய்த்த வரமிளகாய், உளுந்தம்
பரப்பு, எள்ளு, மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கவும்.
- அதனுடன் வதக்கி ஆற வைத்த தக்காளி சேர்த்து அரைக்கவும்.
- தேவைப்பட்டால் சுவைக்கேற்ப உப்பு மற்றும் காரம் சேர்த்து
கொள்ளவும்.
- அதே வாணலியை அடுப்பில் வைத்து தேவைப்பட்டால் எண்ணெய்
சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய
விடவும்.
- அதனுடன் கருவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு
சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- இதில் அரைத்து வைத்த தக்காளி சேர்த்து கிளறினால் சுவையாக ஆந்திரா
ஸ்டைல் தக்காளி பச்சடி தயார்!



Click it and Unblock the Notifications