Latest Updates
-
இந்த 5 சின்னங்களில் ஒன்று கையில் இருந்தாலும் அவர்கள் அரசாள பிறந்தவர்களாக இருப்பார்களாம் - உங்க கையில் இருக்கா? -
புதன் மிதுன ராசியில் வக்ரமடைவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
இதுல உங்கள் விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்.. -
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல்
உங்களுக்கு ஆந்திரா ரெசிபிக்களை உங்கள் வீட்டில் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல் செய்து சாப்பிடுங்கள். இது தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
கிழங்குகளில் சேனைக்கிழங்கு உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரக்கூடிய வேர் காய்கறி. இந்த சேனைக்கிழங்கை வறுவல் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதுவும் உங்களுக்கு ஆந்திரா ரெசிபிக்களை உங்கள் வீட்டில் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல் செய்து சாப்பிடுங்கள். இந்த வறுவல் தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேனைக்கிழங்கு - 250 கிராம் (சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 4 பற்கள்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சேனைக்கிழங்கை குக்கரில் போட்டு, அதில் ஒரு கப் நீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து நீரை வடிகட்டிக் கொள்ளவும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பின் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து கிளறி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* சேனைக்கிழங்குடன் மசாலா அனைத்தும் ஒன்றுசேரும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications