Latest Updates
-
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும்
Andhra Style Vendakkai Fry Recipe in Tamil: வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளரும் என்று கூறுவார்கள். அதற்கு காரணம் வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும்தான். ஆனால் பெரும்பாலான மக்கள் குறிப்பாக குழந்தைகள் வெண்டைக்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வெண்டைக்காயை சாப்பிட வேண்டுமென்றால் அதை ஆந்திர ஸ்டைலில் பொரியலாக செய்து கொடுங்கள்.

இந்த பக்குவத்தில் செய்து கொடுத்தால் வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா வெண்டைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க வேண்டியவை:
- 1 டேபிள் ஸ்பூன் மல்லி விதைகள்
- ½ டேபிள் ஸ்பூன் எள்
- 5 வர மிளகாய்
- அரை ஸ்பூன் சீரகம்
- ¼ கப் வறுத்த வேர்க்கடலை
பொரியல் செய்யத் தேவையானவை:
- 1½ டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 பச்சை மிளகாய் (நீளமாக கீறியது)
- 3 பல் பூண்டு
- 1 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- 250 கிராம் வெண்டைக்காய்
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் மல்லி விதைகள், எள் மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை வாசனை வரும் வரை எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.
- அதன்பின் சீரகம் மற்றும் வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து, அடுப்பை அணைத்து, சற்று ஆறவிட்டு, கொரகொரப்பாக அரைக்கவும்.
- ஒரு வாணலியில் கடலை எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, கடுகு போட்டு தாளிக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் மற்றும் தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.
- அதன்பின், வெண்டைக்காயைச் சேர்த்து நன்றாகக் கிளறி, அதன் வழுவழுப்புத் தன்மை நீங்கும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒருமுறை நன்றாகக் கிளறவும்.
- இறுதியாக, அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து, அனைத்தும் ஒன்றுசேரும் வரை 4-5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
- மசாலா வெண்டைக்காயுடன் நன்றாக சேர்ந்ததும் அடுப்பை அணைத்தால் சூப்பரான ஆந்திரா வெண்டைக்காய் பொரியல் ரெடி!



Click it and Unblock the Notifications
