Latest Updates
-
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் கிரேவி
ஆந்திராவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் பீர்க்கங்காய் கிரேவி. இந்த கிரேவி நன்கு காரமாக சூப்பராக இருக்கும். பீர்க்கங்காயில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் மிகவும் குறைவு.
ஆந்திராவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் பீர்க்கங்காய் கிரேவி. இந்த கிரேவி நன்கு காரமாக சூப்பராக இருக்கும். பீர்க்கங்காயில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. ஆகவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இந்த காய் மிகவும் நல்லது. மேலும் பீர்க்கங்காய் மஞ்சள் காமாலையை குணமாக்க வல்லது மற்றும் இது நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும். இப்படிப்பட்ட பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் கிரேவியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீர்க்கங்காய் - 4 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெந்தய பவுடர் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு பவுடர் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
* வரமிளகாய் - 1
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பீர்க்கங்காயின் தோலை சீவி நீக்கிக் கொண்டு, துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பின் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் பூண்டுகளை ஒன்றிரண்டாக தட்டிப் போட்டு வதக்க வேண்டும்.
* பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பீர்க்கங்காய் நன்கு வெந்தததும், அதில் வெல்லம், சோம்பு பவுடர் மற்றும் வெந்தயப் பவுடர் சேர்த்து கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications