Latest Updates
-
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது.. -
குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 3 சின்னங்களில் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் நீங்க மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலியாம் - ஜாக்கிரதை -
ருசியான வெஜ் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
பொலிவிழந்து இருக்கும் முகத்தை பளிச்சுன்னு மாத்தணுமா? அப்ப காபித் தூளை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை 25-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் வெற்றிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆகஸ்ட் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு கடலால் உருவாகியுள்ள புதிய ஆபத்து என்ன தெரியுமா? -
கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் அம்மிணி கொழுக்கட்டை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும்
ஆந்திரா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்
Andhra Style Puliyodharai Recipe in Tamil: பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுத்துவிடும் பிரதான மதிய உணவாக இருப்பதும், சுற்றுலா செல்வதென்றால் முதலில் பேக் செய்வதும் புளி சாதத்தைதான். இதற்கு காரணம் அதன் சுவையும், அது செய்வதில் உள்ள எளிமையும்தான். ஆனால் ஒரே மாதிரியான புளி சாதத்தை எத்தனை நாட்கள்தான் செய்து கொண்டிருப்பது. பெரியவர்களை விட குழந்தைகள் உணவு விஷயத்தில் விரைவில் சலிப்படைந்து விடுவார்கள்.

எனவே புளி சாதத்தையே வேறு விதத்தில் செய்து கொடுப்பது சலிப்பிலிருந்து உங்களைக் காப்பாற்றும். இந்த நேரத்தில் ஆந்திரா ஸ்டைலில் புளி சாதத்தை முயற்சி செய்து பாருங்கள். ஆந்திரா ஸ்டைல் புளி சாதம் செய்வது மிகவும் எளிதாகவும், புதிய சுவையாகவும் இருக்கும். இந்த உணவு ஆந்திரா முழுவதும் மிகவும் பிரபலமானதாகும். அங்குள்ள அனைத்து கடைகளிலும் இது பிரதானமாக கிடைக்கும்.
உங்களுக்கு சுவையான ஆந்திரா ஸ்டைல் புளி சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் புளி சாதத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி - 1/2 கப்
- தண்ணீர் - 1.25 கப்
- எண்ணெய் - சில துளிகள்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மசாலா செய்வதற்கு:
- புளி - பெரிய எலுமிச்சை அளவு
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
- வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு (சுமார் 1-2 டேபிள் ஸ்பூன்)
- வர மிளகாய் - 3
- பச்சை மிளகாய் - 3
- கறிவேப்பிலை - சிறிது
- பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
வெள்ளை எள் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- புளியை ஒரு கப் சூடான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பச்சரிசியைக் கழுவி, அதனுடன் தண்ணீர் மற்றும் சில துளிகள் சமையல் எண்ணெய் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
- குறைந்த தீயில் வைத்து 2 விசில் வரும் வரை வேக வைத்து, ஆவி அடங்கியதும் குக்கரைத் திறக்கவும்.
- சாதத்தை ஒரு தட்டில் பரப்பி, அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாகக் கலந்து, சாதம் ஆறும் வரை வைக்கவும்.
- ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ஊறவைத்த புளியிலிருந்து சாறு எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். கடலைப்பருப்பு மொறுமொறுப்பாக இருக்க, அதை சுமார் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலையை வறுக்கவும். வேர்க்கடலையின் தோல் வெடிக்கத் தொடங்கும்போது, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பொன்னிறமாகும் வரை வறுத்து, அவற்றை எடுத்து சாதம் இருக்கும் தட்டில் சேர்க்கவும். பருப்பு வகைகளைச் சாதத்துடன் கலந்துவிட வேண்டாம்.
- அதே கடாயில் மீண்டும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, வர மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து நன்றாக வதக்கவும்.
- அதனுடன் புளிக்கரைசல், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். கலவையிலிருந்து எண்ணெய் பிரிந்து, அது கெட்டியான விழுதாக மாறும் வரை கொதிக்கவிடவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி, தேவையான விழுதைச் சாதத்தில் சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் தண்ணீரில் இரண்டு சிட்டிகை பெருங்காயத்தை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, விரலால் நன்றாகக் கலந்து, அந்தத் தண்ணீரைச் சாதத்தில் ஊற்றிக் கலக்கவும்.
- இறுதியாக எள் பொடியை சேர்த்து நன்றாகக் கலந்து, உப்பு சரிபார்த்து, 2 மணி நேரம் அப்படியே ஊறவிடவும். புளிசாதத்தை மூடிவைத்து விடுவது நல்லது.



Click it and Unblock the Notifications