Latest Updates
-
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
மனிதர்களை மீண்டும் அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ்: இதன் அறிகுறிகள் என்ன? இந்தியாவிற்கு இதனால் ஆபத்து உள்ளதா? -
சிம்ம ராசியில் நிகழும் கேது-சந்திர சேர்க்கை: மே 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
முருங்கைக்காயுடன் மாங்காயை சேர்த்து இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சி வேண்டுமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மசாலா மோர் சோடா - எப்படி செய்யணும் தெரியுமா?
இட்லி, தோசைக்கு அற்புதமாக இருக்கும்.. ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி
Andhra Style Peanut Chutney: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசைக்கு சட்னியைத் தான் விரும்பி சாப்பிடுவார்களா?
ஆந்திரா ரெசிபிக்களை உங்கள் வீட்டில் இருப்போர் விரும்பி சாப்பிடுவார்களா? வீட்டில் வேர்க்கடலை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னியை செய்து கொடுங்கள்.

இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 1 கப்
* வரமிளகாய் - 4-5
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 5-6 பல்
* வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
* புளி - 1 எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் வரமிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயத்தை
சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி இறக்கி, அதை வேர்க்கடலையுடன் சேர்த்து
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில், வேர்க்கடலையுடன், மற்ற பொருட்களையும்
சேர்த்து, புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்,
பெருங்காயத் தூள் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தாளித்ததை சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான ஆந்திரா
ஸ்டைல் வேர்க்கடலை சட்னி தயார்.
Image Courtesy: whiskaffair



Click it and Unblock the Notifications











