Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை பச்சடி ரெசிபி...1 கப் கறிவேப்பிலையும், இஞ்சியும் இருந்தா இந்த சூப்பரான பச்சடி ரெடி!
Andhra Style Karuveppilai Pachadi Recipe in Tamil: இட்லி, தோசை செய்வது எவ்வளவு எளிதானதோ அதற்கு என்ன சட்னி செய்வது என்று சிந்திப்பது என்பது மிக மிக கடினமானது. இட்லி, தோசைக்கு வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவற்றைத்தான் பெரும்பாலும் செய்வோம். இது நாளடைவில் சலிப்பை ஏற்படுத்தும். எனவே புதுப்புது சட்னிகள் செய்வது மிகவும் அவசியமானதாகும்.
இந்த நிலையில் ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை பச்சடி இட்லி, தோசைக்கு சிறப்பான சைடிஷாக இருக்கும். ஆந்திரா கறிவேப்பிலை பச்சடி என்பது கறிவேப்பிலை, இஞ்சி, வர மிளகாய் மற்றும் புளி சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான பச்சடியாகும். இந்த காரசாரமான கறிவேப்பிலை பச்சடியை இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடனும் சேர்த்து சாப்பிடவும் அருமையாகவும் இருக்கும். ஆந்திர மக்கள் இந்த கறிவேப்பிலை பச்சடியை சூடான சாதத்தில் போட்டு அதில் நெய் ஊற்றி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை பச்சடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 4 வர மிளகாய்
- 1 துண்டு இஞ்சி(நறுக்கியது)
- 1 கப் புளிச்சாறு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 வர மிளகாய்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை பச்சடியை செய்ய முதலில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடலைப் பருப்பு போட்டு வதக்கவும், பின்னர் வர மிளகாயை போட்டு வறுக்கவும்.
- வர மிளகாய் வதங்கியதும், கறிவேப்பிலையை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து, பின்னர் நறுக்கிய இஞ்சியைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- பின்னர் புளியில் நீரை ஊற்றி சிறிது நேரம் ஊற விடவும். இந்த கட்டத்தில் தீயைக் குறைத்து, கறிவேப்பிலையை நன்கு கிளறவும்.
- பின்னர் இதை ஆறவைத்து பின்னர் மிக்ஸி ஜாரில் கரைத்த புளிச்சாறை சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
- பச்சடியை தழைக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பின்னர் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் அதில் வர மிளகாயை சேர்த்து சட்னியின் மேல் கொட்டி கிளறினால் ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை பச்சடி ரெடி.
- இந்த கறிவேப்பிலை பச்சடி இட்லி, தோசை மற்றும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications