Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சிக்கனை வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சிக்கன் செய்யுங்க..காரமும், சுவையும் வேற லெவலில் இருக்கும்!
Andhra Style Green Chilli Chicken Recipe in Tamil: வீட்டில் என்ன தான் விதமாய் சைவ உணவுகளை சாப்பிட்டாலும், அசைவ உணவுகளின் மீது தான் சிலருக்கு அலாதி பிரியம். சைவ உணவுகளை உப்பு சப்பு இல்லாமல் சாப்பிட்டாலும் அசைவ உணவுகளை கார சாரமாக மூக்கில் இருந்து நீர் அளவிற்கு சாப்பிட வேண்டும் என பலர் விரும்புவார்கள்.
காரம் என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மிளகாய் தான். அதிலும் பச்சை மிளகாயை வைத்து சமைக்கும் உணவு வகைகளை சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். அதே பச்சை மிளகாயை சேர்த்து சிக்கன் சமைத்தால் எப்படி இருக்கும். வாங்க பச்சை மிளகாய் சில்லி சிக்கன் எப்படி ஆந்திர ஸ்டைலில் செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- எண்ணெய் - தேவையான அளவு
- பிரியாணி இலை - 1
- வெங்காயம் - 1
- கருவேப்பிலை - சிறிதளவு
- கரம் மசாலா - ½ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
மேரினேட் செய்ய:
- சிக்கன் (எலும்புடன்) - 600 கிராம்
- மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்
- உப்பு - 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
பச்சை மசாலா விழுது:
- பச்சை மிளகாய் - 10 அல்லது 12
- புதினா - 2 கைப்பிடி அளவு
- கொத்தமல்லி இலைகள் - 2 கைப்பிடி அளவு
- இஞ்சி - சிறிதளவு (ஒரு இஞ்ச் அளவு)
- பூண்டு - 6 பல்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- மிளகு - 1 டீ ஸ்பூன்
- ஏலக்காய் - 2
செய்முறை:
- முதலில் சிக்கனை இரண்டு முறை தண்ணீரில் அலசி கடைசியாக உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அலசி எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற விடவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பின் மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, மற்றும் ஏலக்காயை சேர்க்கவும்.
- அதனுடன் தண்ணீரை தேவையான அளவில் சிறிது சிறிதாக சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் பிரித்து வரும் வரை நன்றாக வதக்கவும்.
- அதில் மெரினெட் செய்து வைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடங்களுக்கு பின் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- சிக்கன் நன்றாக வெந்து மசாலா சுருண்டு வெந்து வரும் வரை வேக விடவும்.
- கடைசியாக கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான பச்சை மிளகாய் சில்லி சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications