Latest Updates
-
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டும் உள்ளது? வேறு நிறத்தில் டயர் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
வக்ர சுக்கிரன் இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகிறார்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முருங்கைக்கீரை கோதுமை தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 03, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தீபாவளிக்கு மொறுமொறுன்னு பேக்கரி ஸ்டைல் தட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
உத்தர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன?
15 பல் பூண்டு இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்புவை செய்யுங்க - சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமா இருக்கும
Andhra Poondu Pappu Recipe in Tamil: ஆந்திரா ஹோட்டல்களுக்கு சென்றால் அங்கு பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுவது பருப்பு பொடியும், ஆந்திரா ஸ்டைல் பப்புவும்தான். சூடான சாதத்தில் பப்புவை ஊற்றி அதனுடன் நெய் சேர்த்து காரமான ஊறுகாயும், அப்பளமும் வைத்து சாப்பிடுவதே அலாதி இன்பம்தான். பெரும்பாலான நபர்கள் ஆந்திர மெஸ்களுக்கு செல்வதற்குக் காரணமாகவும் இந்த ஆந்திரா பப்பு இருக்கும்.

உங்களுக்கும் இந்த ஆந்திரா ஸ்டைல் மிகவும் பிடிக்குமென்றால், இனி அதை சாப்பிட ஆந்திர ஹோட்டலுக்குத்தான் போக வேண்டுமென்ற அவசியமில்லை. வீட்டிலேயே அந்த சுவையான பப்புவை செய்து விடலாம். அதிலும் நாம் இப்போது பார்க்கப்போவது கொஞ்சம் வித்தியாசமான பூண்டு பப்பு. இந்த பூண்டு பப்பு செய்வதற்கு மிகவும் எளிதானது அதேசமயம் மிகவும் சுவையானதும் கூட.
இந்த ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்பு செய்தால், இது சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷல் பூண்டு பப்புவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்பெஷல் பூண்டு பப்புவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1.5 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 15 பல் பூண்டு
- 1/4 ஸ்பூன் கடுகு
1/4 ஸ்பூன் சீரகம்
- 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 1/2 கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1/2 கப் தக்காளி, பொடியாக நறுக்கியது
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் சாம்பார் பொடி
- தேவையான அளவு உப்பு
- 2 பச்சை மிளகாய், கீறியது
- 3 கப் நறுக்கிய கீரை
- சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- 1/2 ஸ்பூன் வெல்லம்
- 1/2 கப் துவரம் பருப்பு
- 1 ஸ்பூன் நெய்
செய்முறை:
- ஒரு பிரஷர் குக்கரில் 1/2 கப் துவரம்பருப்பை 1.5 கப் தண்ணீருடன் சேர்த்து, சுமார் 5 விசில் வரும் வரை வேகவைக்கவும். பிரஷர் அடங்கும் வரை காத்திருக்கவும்.
- குக்கரைத் திறந்து, பருப்பைச் சற்று மசித்துக்கொள்ளவும். இதைத் தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, முழு பூண்டுப் பற்களைச் சேர்க்கவும். குறைந்த தீயில் 3-4 நிமிடங்கள் வதக்கவும். பூண்டு நன்றாக வேகம் வரை வதக்கவும்.
- பூண்டு பழுப்பு நிறமாக மாறும்போது, அதை ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.
- அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து, கடுகு மற்றும் சீரகத்தைப் போடவும். அதனுடன் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- கடுகு பொரியத் தொடங்கியதும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அவை நன்கு குழையும் வரை வேகவைக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.
- தக்காளி நன்கு வெந்து மென்மையாக மாறியதும், நறுக்கி வைத்துள்ள கீரையைச் சேர்க்கவும்.
- பிறகு, புளிக்கரைசலைச் சேர்த்து, அரை டீஸ்பூன் வெல்லத்தைச் சேர்க்கவும். இதை 7-8 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- இறுதியாக, வேகவைத்த துவரம்பருப்பைச் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி, வதக்கி வைத்துள்ள பூண்டு பல்லைச் சேர் த்து நன்கு கிளறவும்.
- ஆந்திரா ஸ்டைல் பூண்டு பருப்பு ரெடி. இதை சாதத்தில் ஊற்றி ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications
