Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ஆந்திரா மிளகாய் சட்னி... இந்த சட்னிக்கு அடுப்பே தேவையில்ல.. ஐந்தே நிமிடத்தில் செஞ்சுடலாம்.. எப்படின்னு பாருங்க
Andhra Milagai Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? காலையில் சற்று லேட்டாக எழுந்துவிட்டீர்களா? 5 நிமிடத்தில் சட்னி செய்யணுமா? அப்படியானால் ஆந்திரா மிளகாய் சட்னியை செய்யுங்கள்.
இந்த சட்னிக்கு அடுப்பே தேவையில்லை. அதேப் போல் இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்வீர்கள். பயணங்களை மேற்கொள்ளும் போது இந்த சட்னியை செய்து கொண்டு சென்றால், நீண்ட நேரம் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ஆந்திரா மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* பச்சை மிளகாய் - 6
* பூண்டு - 10 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 25
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் புளியை நீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 6 பச்சை மிளகாய் அல்லது காரத்திற்கு ஏற்ப
மிளகாயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்கள், சீரகம், சின்ன வெங்காயம் ஆகியவற்றை
சேர்க்க வேண்டும். ஒருவேளை சின்ன வெங்காயம் இல்லாவிட்டால், 2 பெரிய
வெங்காயத்தை துண்டுகளாக்கி சேர்க்கலாம்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 டீஸ்பூன் வெல்லத்தை
சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறினால், சுவையான ஆந்திரா
மிளகாய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
