Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
Andhra Manga Verkadalai Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி அரைத்து போரடித்து விட்டதா? புதுசா ஏதாவது சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்ப நம்ம அக்கட தேசமான ஆந்திரா ஸ்டைல் சைடிஷ்களை ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான சட்னிகளுக்கு மாற்றாக சற்று காரமான அதே சமயம் புளிப்பான சட்னியை செய்ய வேண்டுமா? அப்ப இந்த ஆந்திரா ஸ்டைல் மாங்காய் வேர்க்கடலை சட்னியை ஒரு தடவை முயற்சி செய்து பாருங்க.

இந்த வேர்க்கடலை சட்னி வழக்கமாக செய்யும் வேர்க்கடலை சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும். இதை இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த ஆந்திரா மாங்காய் வேர்க்கடலை சட்னி வர மிளகாய், வேர்க்கடலை மற்றும் வீட்டிலுள்ள எளிய பொருட்களையும் வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் மாங்காய் வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் மாங்காய் வேர்க்கடலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 மாங்காய்(தோல் மற்றும் கொட்டை நீக்கியது)
- 3 ஸ்பூன் எண்ணெய்
- வர மிளகாய்
- 1/2 கப் வேர்க்கடலை
- 1 ஸ்பூன் கடுகு
- கால் ஸ்பூன் வெந்தயம்
- 1/4 ஸ்பூன் பெருங்காயம்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/4 ஸ்பூன் வறுத்த வெந்தயப் பொடி
- ஒரு பெரிய சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- முதலில் நீள மாங்காயை நன்றாக கழுவி தோலை நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் வேர்க்கடலையை மிதமான தீயில் வைத்து, அவை நிறம் மாறும் வரை வறுத்து, ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
- அதே கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை அடுத்தடுத்துச் சேர்க்கவும்.
- கடுகு வெடித்ததும், வெந்தயம் பழுப்பு நிறமாகி நறுமணம் வரும் வரை மற்றும் மிளகாய் நிறம் மாறும் வரை வறுக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, பெருங்காயம் சேர்த்து, இந்தக் கலவை முழுவதுமாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
- ஆறிய பிறகு, அவற்றை நைசான பொடியாக அரைத்துக்கொள்ளவும். இப்போது வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து, மீண்டும் மென்மையான பொடியாக அரைக்கவும். இறுதியாக நறுக்கிய மாங்காயைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, கலவை மென்மையாகும் வரை அரைக்கவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு சிறிய கடாயில் எண்ணெயைச் சூடாக்கவும். எண்ணெய் நன்கு சூடேறியதும், கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்கத் தொடங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, பெருங்காயத் தூள் மற்றும் வறுத்த வெந்தயப் பொடியைச் சேர்க்கவும்.
- இந்த தாளிப்பை உடனடியாக சட்னி மீது கொட்டி நன்றாக கிளறவும்.
- அவ்வளவுதான் சுவையான மாங்காய் வேர்க்கடலை சட்னி ரெடி. இது சாதம், இட்லி அல்லது தோசையுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
