Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்
Andhra Karuveppilai Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் போன்றவை சரியான காம்பினேஷனாக இருக்கும். நீங்கள் சட்னி தான் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? வீட்டில் கறிவேப்பிலை அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த கறிவேப்பிலையை ஆந்திரா ஸ்டைலில் ஒரு சூப்பரான சட்னியை செய்யுங்கள்.

ஆந்திரா உணவுகள் என்றாலே கொஞ்சம் காரசாரமாகத்தான் இருக்கும், இந்த சட்னியும் அதற்கு விதிவிலக்கல்ல. இப்படி கறிவேப்பிலை சட்னி செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். இந்த சட்னியை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்தால் ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 50 கிராம் கறிவேப்பிலை
- 20 கிராம் புளி
- 100 கிராம் பச்சை மிளகாய்
- தேவையான அளவு உப்பு
- 5 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
- 2 ஸ்பூன் தனியா
- 10 பூண்டு பல்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, கடுகு மற்றும் வெந்தயத்தைச் சேர்த்து, வெந்தயம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- புளியைக் கரைத்து ஒரு கப் புளிக்கரைசல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பின்னர் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பைச் சேர்த்து, அதன் நிறம் மாறும் வரை வறுக்கவும்; பின்னர் வெந்தயத்தைச் சேர்க்கவும்.
- ;பின்னர் இதில் பூண்டு பல் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, பச்சை மிளகாய் எண்ணெயில் நன்கு வேகும் வரை வதக்கவும்.
- பச்சை மிளகாய் நன்கு வெந்ததும், கழுவி உலர்த்திய கறிவேப்பிலையைச் சேர்த்து, இலைகளிலுள்ள ஈரம் வற்றும் வரை மிதமான தீயில் வறுக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
- இந்த கலவை நன்கு ஆறியதும் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொண்டு, தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
- கறிவேப்பிலை வறுத்த அதே எண்ணெயில் புளிக்கரைசலையும் வெல்லத்தையும் சேர்த்து, கெட்டியான கூழ் பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்கவும்.
- கெட்டியான புளிக்கரைசலில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்த கறிவேப்பிலை சட்னியைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிட்டு நன்றாகக் கலக்கவும். இதை ஆற விடவும்.
- இந்த சட்னியை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்தால், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது குறைந்தது ஒரு மாதம் வரையிலும், வெளியே வைக்கும்போது 20 நாட்கள் வரையிலும் கெடாமல் இருக்கும்.
- இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
