Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
Andhra chutney powder recipe: ஆந்திரா சட்னி பவுடர்
ஆந்திராவில் சட்னி பவுடர் மிகவும் பிரபலமானது. இந்த சட்னி பவுடரை இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
பொதுவாக ஆந்திரா ரெசிபிக்கள் மிகவும் சுவையாகவும், காரமாகவும் இருக்கும். ஆந்திரா ஸ்டைல் சிக்கன், மட்டன், ஏன் சைவ ரெசிபிக்கள் அனைத்துமே தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும். அதேப் போல் ஆந்திராவில் சட்னி பவுடர் மிகவும் பிரபலமானது. இந்த சட்னி பவுடரை இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். அதுவும் இந்த ஆந்திரா சட்னி பவுடரை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா சட்னி பவுடரை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா சட்னி பவுடரின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 1/2 கப்
* துவரம் பருப்பு - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு பொருளாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வறுத்த பொருட்கள் மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொண்டு, தேவையான போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
