Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்..
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Afghani Soya Curry Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் வித்தியாசமான மற்றும் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சைடு டிஷ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சோயா என்றால் ரொம்ப பிடிக்குமா? எப்போதும் சோயாவை ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சோயாவை ஆப்கானி ஸ்டைலில் செய்து கொடுங்கள். இந்த ஆப்கானி சோயா கறியானது க்ரீமியாகவும், டேஸ்டியாகவும் இருக்கும். இதை ஒருமுறை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு ஆப்கானி சோயா கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆப்கானி சோயா கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சோயா/மீல் மேக்கர் - 3 கப் அல்லது 175 கிராம்
* சுடுநீர்
வதக்கி மசாலா அரைப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய - 4 (கீறியது)
* முந்திரி - 12
* மிளகு - 2 டீஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கையளவு
* தயிர் - 400 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* ஊற வைத்த சோயா/மீல் மேக்கர்
* அரைத்த மசாலா
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம்
செய்முறை:
* முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மீல் மேக்கரை எடுத்துக்
கொண்டு, அதில் நல்ல சூடான நீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் லேசாக நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் முந்திரி, மிளகு, சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை
சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து முதலில் அரைக்க
வேண்டும். பின் அத்துடன் 400 கிராம் தயிர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஊற வைத்த மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை
பிழிந்துவிட்டு, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மீல் மேக்கரை சேர்த்து நன்கு 4 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட்டு, 1 கப்
நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, மூடி வைத்து 15
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் கரம் மசாலா, கசூரி மெத்தியை சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் சிறிது பிரஷ் க்ரீம்மை சேர்த்து இறக்கி கிளறினால்,
சுவையான ஆப்கானி சோயா கறி தயார்.



Click it and Unblock the Notifications
